மன்னார், உப்புக்குளம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்!
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் உப்புக்குளம், கொந்தைப்பிட்டி ஜென்னத் நகர் பிரதேச மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரணப்பொருட்கள் நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் மன்னார் மாவட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டதுடன், மக்களின் வாழ்வாதாரமும் பெரிதும் கேள்விக்குறியாகி இருந்தது.
அந்த வகையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றது.
இதன் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் நகர சபையில் பிரதி நகரபிதா ஹூஸைன், உறுப்பினர் இம்ஷாத், முசலி பிரதேச சபை உறுப்பினர் நிஸா மற்றும் ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





