புரட்சி போராட்டங்களுக்கு மத்தியில் பங்களாதேஷ் தேர்தல் களம் சூடு பிடிப்பு
காலிதாசியாவின் புதல்வர் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளின் பின் மீண்டும் பங்களாதேஷ் வந்தடைந்துள்ளார்.
பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் பதில் தலைவரான இவரை இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் வீதி நெடுகிலும் வரவேற்றனர்.
அத்துடன் டாக்காவில் உள்ள பர்பச்சல் திறந்த சதுக்கத்தில் மாபெரும் கூட்டமும் நடைபெற்றுள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பழிவாங்கல்கள் காரணமாக இங்கிலாந்தில் அரசியல் தஞ்சமிருந்த இவர், எதிர்வரும் பொது தேர்தலை இலக்கு வைத்து வந்திருப்பது தற்போதைய பங்களாதேஷின் ஸ்திரமற்ற ஆட்சியாளர் ஆலோசகர் முகம்மது யூனுசின் வாக்கு வங்கிக்கு பெரும் சவாலாக அமையும் என உள்நாட்டு ஊடகங்களின் செய்திகளை மேற்கோள் காட்டி சில சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.




