Sunday, December 28, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட கெளரவிப்பு விழா 2025!

புத்தளத்தில் இடம்பெற்ற பிரம்மாண்ட கெளரவிப்பு விழா 2025!

புத்தளம் கல்வி வலயப் பிரிவில் கடந்த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவை நேற்று சனிக்கிழமை (27) புத்தளம் நகர மண்டபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வு புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் தலைவர் எம்.ஆர்.எம். ஸஜாத் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம அதிதியாக தலால் ராபி (Economist, IMF Columnist, Former ADB Consultant and former Director at Ernst & Young) அவர்கள் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக டாக்டர் என்.எம்.எம். ஷபீக் (Senior Lecturer), Head of the Department of Educational Psychology, at the Faculty of Education, University of Colombo),
எம்.எப்.எம்.ரியாஷ் (SLTES) Manager (Professional Development Center for Teachers, Puttalam) ஏ.ஏ.எம். அசாம் (SLPS) Assistant Director of Planning (Manthai East Divisional Secretariat and Mullaitivu District Secretariat) ஆகியோரும், ஏனைய விசேட அதிதிகள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் சுமார் 350க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அதேபோல இந்த நிகழ்வில் துறை சார் நிபுணர்களைக் கொண்டு குழுக்கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் panel discussion பகுதியை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தின் அறிவிப்பாளர் பக்ருதீன் தொகுத்து வழங்கினார். அதேபோல புத்தளம் இளங்கலை பட்டதாரிகளின் அமைப்பின் முதலாவது நிர்வாக குழுவின் செயலாளரும் தற்போதைய ஆலோசனைக் குழு உறுப்பினரும் ஆகிய ஐ.என்.எப். றௌஹா மாணவர்களுக்கான ஊக்குவிப்பு உரையை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் பிரதித் தலைவர் எம்.ஜே.எம். ஆஷிபின் நன்றியுடன் மேற்படி நிகழ்வு நிறைவு பெற்றது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular