ஜனாதிபதி அநுர குமார திசாநாய்கவின் உத்தரவுக்கமைய, மக்கள் அவசரகால நிலைமையை நீடித்து, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (28) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக, பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், பொதுமக்கள் வாழ்வுக்கு அத்தியாவசியமான விநியோகங்கள் மற்றும் சேவைகளை உரிய முறையில் பேணுவதற்காக இவ்வர்த்தமானி வெளியிடப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களை அடுத்து, கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
அதற்கமைய இன்றுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில் மீண்டும் அது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


