ஜூட் சமந்த
வீட்டின் பின்புறம் வழியாக நடந்த கொள்ளை சம்பவத்தில் சுமார் ரூ.38,88,500 மதிப்புள்ள சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வென்னப்புவ, நைனமடம பகுதியைச் சேர்ந்த ஷெரந்தி சோவிஸ் (31) அளித்த புகாரைத் தொடர்ந்து வென்னப்புவ காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
புத்தாண்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தானும் தனது குடும்பத்தினரும் நேற்று30 ஆம் தேதி காலை 9.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி மதியம் 12.30 மணியளவில் திரும்பி வந்ததபோது இவ்வாறான அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புகார்தாரர் போலீசாரிடம் தெரிவித்தார்.
அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டின் பின்புறக் கதவை உடைத்து யாரோ ஒருவர் வீட்டில் இருந்த பணம், தங்க நகைகள் மற்றும் ஒரு ஸ்டாக் மதுபானம் ஆகியவை திருடிச்சென்றுள்ளதாக புகார்தாரர் போலீசாரிடம் மேலும் தெரிவித்தார்.
கொள்ளையர்களை கைதுசெய்ய வென்னப்புவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


