ஜூட் சமந்த
முச்சக்கர வண்டியும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர் உயிரிழந்ததாக ஹெட்டிபொல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாரியபொல – சிலாபம் வீதியில் உள்ள கிரத்தலான பகுதியில் கடந்த 8 ஆம் திகதி மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் முச்சக்கர வண்டியின் ஓட்டுநரான ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் மற்றும் டிப்பர் லாரி ஓட்டுநர் இருவரும் ஹெட்டிபொல மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் குளியாப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஹெட்டிபொல பொலிஸாரின் போக்குவரத்துப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.


