ஜூட் சமந்த
மக்கள் சேவையுடன் நினைவுகூரப்பட்ட சனத் நிஷாந்த: இரண்டாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பெரேராவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பல்வேறு சமய மற்றும் சமூக நலன்புரித் திட்டங்கள் கடந்த 25 ஆம் திகதி நாள் முழுவதும் ஆராச்சிக்கட்டுவ, வென்னப்புவ மற்றும் ஆனமடுவ ஆகிய பகுதிகளில் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.
மறைந்த அமைச்சரின் மக்கள் பணிகளை கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகளில், அவரது பாரியார் சட்டத்தரணி சமரி பிரியங்கா பெரேரா கலந்துகொண்டு தேவையுடைய பொதுமக்களுக்கு மூக்குக் கண்ணாடிகளை வழங்கி வைத்தார். அத்துடன், அமைச்சரின் நினைவாக அப்பகுதி மக்கள் பெருமளவில் ஒன்றிணைந்து இரத்த தானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
தமது அன்புக்குரிய மக்கள் பிரதிநிதியின் பிரிவை நினைவுகூரும் வகையில், ஆன்மீக வழிபாடுகளுடன் மாத்திரமன்றி, உயிர்காக்கும் இரத்த தானம் மற்றும் வாழ்வுக்கு ஒளியூட்டும் கண்ணாடி வழங்கல் போன்ற மனிதாபிமானப் பணிகளுக்கூடாக அவரது நினைவுகள் மீண்டும் ஒருமுறை மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



