கத்தோலிக்க தர்மப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை: பெறுபேறு மீளாய்வு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2024 (2025) ஆம் ஆண்டிற்கான கத்தோலிக்க தர்மப் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது,.
விண்ணப்பங்கள் இணையவழி (Online) ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரர்கள் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk இற்குச் சென்று “Exam Information Center” என்பதைத் தெரிவு செய்வதன் மூலமோ அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற நேரடி இணைப்பு ஊடாகவோ விண்ணப்பிக்க முடியும்,.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் திகதி 2026.02.13 ஆகும்,.
ஒரு பாடத்தை மீளாய்வு செய்வதற்கான கட்டணம் ரூபா 250/- ஆகும்,. இந்தக் கட்டணத்தை கடனட்டை (Credit Card), பற்று அட்டை (Debit Card) அல்லது தபால் அலுவலகங்கள் ஊடாகச் செலுத்த முடியும்.
இணையவழியில் கட்டணம் செலுத்திய பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும். அந்தப் பிரதி தர்மப் பாடசாலை அதிபர் அல்லது நிறுவனத் தலைவரின் பரிந்துரையுடன் ‘பரீட்சை ஆணையாளர் நாயகம், நிறுவனப் பரீட்சைகள் மதிப்பீட்டுக் கிளை, இலங்கை பரீட்சைத் திணைக்களம், த.பெ. 1503, கொழும்பு’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்,.
சரியான பாடங்களை உள்வாங்கி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும் என்பதுடன், மீளாய்வுக் கட்டணம் செலுத்தப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது,.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011-2785105 அல்லது 011-2786235 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொள்ள முடியும்,.
தகவல்: அ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே, பரீட்சை ஆணையாளர் நாயகம்


