இருபதுக்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் 8 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 61 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.
169 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
இதனூடாக அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது.
இதேவேளை இலங்கைத் தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி நிலவும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத் தாக்குதல்கள், வீரர்களின் மனநலத்தையும் விளையாட்டின் எதிர்காலத்தையும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ள அணியின் தலைவர் தசுன் ஷானக, இதில் அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொண்டாலும், வெளியிலிருந்து வரும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இலங்கைத் தேசிய கிரிக்கெட் அணியைச் சுற்றி நிலவும் எதிர்மறையான விமர்சனங்கள் மற்றும் சமூக வலைதளத் தாக்குதல்கள், வீரர்களின் மனநலத்தையும் விளையாட்டின் எதிர்காலத்தையும் பாதிப்பதாகத் தெரிவித்துள்ள அணியின் தலைவர் தசுன் ஷானக, இதில் அரசாங்கம் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியதைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தோல்விக்கான பொறுப்பை அணி ஏற்றுக்கொண்டாலும், வெளியிலிருந்து வரும் தொடர்ச்சியான எதிர்மறை விமர்சனங்கள் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
அணிக்குள் நேர்மறையான எண்ணங்களுடன் இருக்க முயற்சி செய்தாலும், பொதுவெளியில் பரப்பப்படும் விமர்சனங்களைக் கட்டுப்படுத்துவது வீரர்களுக்கு கடினமாக இருப்பதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
குறிப்பாக, உலகக்கிண்ணத் தோல்விக்கான காரணங்களை அணி நிர்வாகம் அறிந்திருப்பதாகவும், ஆனால் குறைகளை நிவர்த்தி செய்வதை விட எதிர்மறையான கருத்துக்களே அதிகம் பரப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இலங்கை அணியின் சரிவு குறித்து சங்கக்கார உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள விடயம் கிரிக்கட் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய பின்னடைவுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தனது கவலையையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைக்கால தோல்விகளால் ரசிகர்கள் ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளதைப் போலவே, வீரர்களும் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டுக்காக விளையாடுவது என்பது ஒரு கௌரவம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய பொறுப்பு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக கிரிக்கெட் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாம் பழைய முறைகளையே பின்பற்றினால் பின்தங்கிவிடுவோம் என அவர் எச்சரித்துள்ளார்.
“நாம் மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளத் தவறினால், சர்வதேச அரங்கில் முக்கியத்துவமற்ற ஒரு அணியாக மாறும் அபாயம் உள்ளது” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



