Tuesday, March 31, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsநாளை கட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்!

நாளை கட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்!

நாளை (1) மாத்திரம், வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட (அனைத்து வாகனங்களும்) வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி அனைத்து வகையான வாகனங்களும் நாளை எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு, வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில், வாராந்த ஒதுக்கீட்டின் அடிப்படையில் எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கமைய எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை இலக்கமாயின் (1,3,5,7,9) ஒற்றை இலக்க நாட்களிலும், இறுதி இலக்கம் இரட்டை இலக்கமாயின் (2,4,6,8,0) இரட்டை இலக்க நாட்களிலும் எரிபொருள் வழங்கப்படுகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular