Thursday, April 30, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கையிலிருந்து ஹஜ் செல்லும் முதலாவது குழு நாளை பயணம்!

இலங்கையிலிருந்து ஹஜ் செல்லும் முதலாவது குழு நாளை பயணம்!

2026ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து புறப்படும் முதலாவது குழு நாளை புனித மக்கா நோக்கி பயணமாகிறது.

புனித கடமையை நிறைவேற்ற புறப்பட்டுள்ள முதலாவது குழுவினரை வாழ்த்தி வழியனுப்பும் விசேட நிகழ்வு நாளை (மே 01) நடைபெறவுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஹஜ், உம்ரா குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில், இந்த விசேட நிகழ்வு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த கௌரவமிக்க நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யாத்திரிகர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கவுள்ளனர்

அந்த வகையில் மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கௌரவ முனீர் முலப்பர், மேல் மாகாண ஆளுநர் கௌரவ ஹனீப் யூசுப், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மேன்மைதங்கிய காலித் ஹமூத் அல்கஹ்தானி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் ஹஜ், உம்ரா குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular