Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldபுனித மக்கா நகருக்கு ஆபத்தா? சர்வதேச அரங்கில் வெடித்த பெரும் சர்ச்சை!

புனித மக்கா நகருக்கு ஆபத்தா? சர்வதேச அரங்கில் வெடித்த பெரும் சர்ச்சை!

  • மக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? சவூதியின் குற்றச்சாட்டை மறுத்து ஹூதி தலைவர் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை!
  • புனித மக்கா நகருக்கு ஆபத்தா? சர்வதேச அரங்கில் வெடித்த பெரும் சர்ச்சை: களமிறங்கிய ஹூதி இயக்கம்!
  • “புனித தலங்களைப் பாதுகாக்க நாம் தயார்”: சவூதி குற்றச்சாட்டை அடியோடு நிராகரித்த அப்துல் மாலிக் அல்-ஹூதி!

மக்கா மீதான தாக்குதல் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்: புனித தலங்களைப் பாதுகாக்க நாம் தயார் என ஹூதி தலைவர் அறிவிப்பு!

அல்ஜசீரா: மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முஸ்லிம்களின் மிக முக்கியமான புனித நகர் மீது குறிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.மக்கா நகரை இலக்கு வைத்து ஹூதி அமைப்பினர் தாக்குதல் நடத்த முற்பட்டதாக சவூதி அரேபியா பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு ஏமனின் ஹூதி தலைவர் அப்துல் மாலிக் அல்-ஹூதி நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

தொலைக்காட்சி ஊடாக விசேட உரையாற்றிய அப்துல் மாலிக் அல்-ஹூதி, சவூதி அரேபியாவின் இந்த குற்றச்சாட்டை “அப்பட்டமான கட்டுக்கதை மற்றும் அவதூறு” என கடுமையாகச் சாடினார்.இஸ்லாத்தின் புனித தலமான மக்கா மீதோ அல்லது ஏனைய புனித தலங்கள் மீதோ தாம் ஒருபோதும் தாக்குதல் நடாத்தவில்லை என்றும், மாறாக அத்தலங்களைப் பாதுகாப்பதற்கான முழுமையான உரிமையும் அர்ப்பணிப்பும் தமக்கே உள்ளதாகவும் அவர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மக்கா நகரின் தெற்குப் பகுதியில் வைத்து வான்வழித் தற்காப்புப் படையினரால் ட்ரோன் ஒன்று இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், அது தடைசெய்யப்பட்ட வான் எல்லைக்குள் நுழையவிருந்ததாகவும் சவூதி கூட்டுப்படை தெரிவித்திருந்தது. புனித தலங்களின் பாதுகாப்பு என்பது “சிவப்புக் கோடு” என எச்சரித்த சவூதி தரப்பு, இச்செயற்பாடு ஒட்டுமொத்த முஸ்லிம் உலகையும் அச்சுறுத்தும் செயல் என்றும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

எனினும், தமக்கு எதிரான பிராந்திய மற்றும் சர்வதேச ஆதரவைத் திரட்டுவதற்காகவே சவூதி இவ்வாறான போலிப் பிரசாரங்களைக் கையில் எடுத்துள்ளதாக அல்-ஹூதி குற்றம் சுமத்தியுள்ளார். உண்மை நிலவரத்தை ஆராயாமல் அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என சர்வதேச சமூகத்தை எச்சரித்துள்ள அவர், ஏமன் மக்கள் மீது முன்னெடுக்கப்படும் பொருளாதாரத் தடைகள் மற்றும் இராணுவத் தாக்குதல்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே மக்கா விவகாரம் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular