Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYநாகவில்லுவில் உதைப்பந்தாட்டத் திருவிழா: சாம்பியனானது ரைடர்ஸ்!

நாகவில்லுவில் உதைப்பந்தாட்டத் திருவிழா: சாம்பியனானது ரைடர்ஸ்!

புத்தளம் நாகவில்லு பாடசாலை மைதானம் கடந்த மூன்று நாட்களாக உதைப்பந்தாட்ட ரசிகர்களின் ஆரவாரத்தாலும், மின் ஒளியின் வெளிச்சத்தாலும் விழாக்கோலம் பூண்டிருந்தது. லண்டன் Property Plus Management Limited நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் மிகப்பிரமாண்டமாக அரங்கேறிய ‘KNM – EFL Season II’ தொடர், உள்ளூர் விளையாட்டு வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.

நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் திரண்ட எருக்கலம்பிட்டியின் இளம் சிங்கங்கள் 10 அணிகளாகப் பிரிந்து, களத்தில் தங்களது அபார திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு லீக் ஆட்டமும் ரசிகர்களுக்குக் கண்விருந்து படைத்த நிலையில், தொடரின் உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் எருக்கலம்பிட்டி டைடன்ஸ் மற்றும் எருக்கலம்பிட்டி ரைடர்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதின.

ஆரம்பம் முதலே அனல் பறந்த இறுதிப் போட்டியின் முதல் பாதியில், மைதானத்தை முழுமையாகத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்த டைடன்ஸ் அணியினர் போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்து முன்னிலை பெற்றனர். எனினும், டைடன்ஸின் கொண்டாட்டத்தை நீண்ட நேரம் நீடிக்க விடாத ரைடர்ஸ் அணி, அதிரடி வியூகங்களை வகுத்து ஒரு கோலைத் திருப்பி அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தது.

முதல் பாதியில் ஏற்பட்ட சமநிலை, இரண்டாம் பாதியை இன்னும் உக்கிரமாக்கியது. இரண்டாம் பாதியில் அசுர பலத்துடன் களமிறங்கிய எருக்கலம்பிட்டி ரைடர்ஸ் அணியினர், பந்தைக் கடத்தும் நேர்த்தியிலும் தடுப்பாட்டத்திலும் முழு ஆதிக்கத்தையும் நிலைநாட்டினர். எதிரணியின் தற்காப்பு அரணைத் தகர்த்து மேலும் இரண்டு கோல்களை அடுத்தடுத்துப் புகுத்தி மைதானத்தையே அதிர வைத்தனர் எருக்கலம்பிட்டி ரைடர்ஸ் அணியினர்.

இறுதி விசில் ஒலிக்கப்படும்போது 3:1 என்ற வலுவான கோல் கணக்கில் எருக்கலம்பிட்டி டைடன்ஸ் அணியை வீழ்த்திய எருக்கலம்பிட்டி ரைடர்ஸ், லண்டன் Property Plus Management Limited நிறுவனத்தின் பிரதான அனுசரணையில் இடம்பெற்ற KNM – EFL Season II இன் மாபெரும் சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கிப் புதிய சரித்திரம் படைத்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சீசனில் எருக்கலம்பிட்டி லயன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில், இம்முறை ரைடர்ஸ் அணி மகுடம் சூடி கோப்பையைத் தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular