Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYFFSL ஃபெடரேஷன் கிண்ணம் 2026' நாளை ஆரம்பம்!

FFSL ஃபெடரேஷன் கிண்ணம் 2026′ நாளை ஆரம்பம்!

ரேஸ்கோர்ஸில் சர்வதேச உதைப்பந்தாட்ட அதிரடி:

கொழும்பில் குவியும் சர்வதேச இளம் திறமைகள்:

44 அணிகள் மோதும் மாபெரும் கால்பந்து திருவிழா!

இலங்கை கால்பந்தின் அடுத்த தலைமுறை நாயகர்கள் யார்?

இலங்கை உதைப்பந்தாட்ட உலகிற்குப் புத்துயிர் ஊட்டவும், அடுத்த தலைமுறைக்கான தேசிய நாயகர்களை அடிமட்டக் கட்டமைப்பிலிருந்து கண்டறியவும் கொழும்பு ரேஸ்கோர்ஸ் சர்வதேச மைதானம் தயாராகிவிட்டது.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) வழிகாட்டலில் மான்செஸ்டர் உதைப்பந்தாட்ட அகடாமி (MSA) இணைந்து முன்னெடுக்கும் இளையோர் கால்பந்து திருவிழாவான ‘FFSL ஃபெடரேஷன் கிண்ணம் 2026’ தொடரின் 3ஆவது பதிப்பு நாளை அக்டோபர் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முழு மூச்சாக இடம்பெறவுள்ளது.

நாட்டின் மிக முக்கிய உதைப்பந்தாட்ட அணிகளை உலுக்கிப் பார்க்கும் வகையில் உள்நாட்டின் 24 முன்னணி உதைப்பந்தாட்ட அகடமிகள் இத்தொடரில் சங்கமிக்கின்றன.

கொழும்பு எஃப்.சி, ஜாவா லேன், சவுண்டர்ஸ், பார்சிலோனா கால்பந்து அகடாமி மற்றும் கொழும்பு யூத் உள்ளிட்ட மிக முக்கிய உள்ளூர் ஜாம்பவான்களுடன் எருக்கலம்பிட்டி யூத் அகடமியும் கலந்துகொள்ளும் இக் களம் மிகவும் சூடுபிடிக்கவுள்ளது.

இலங்கையின் பலத்தை சர்வதேச ரீதியில் பரிசோதிக்கும் வகையில் இந்தியா, மாலைதீவு, சீஷெல்ஸ் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த இளையோர் அணிகளும் களம் காண்பதால் இத்தொடர் விறுவிறுப்பின் உச்சத்தைத் தொடவுள்ளது.

அந்த வகையில் நாட்டின் சகல பாகங்களுலிருந்தும் கலந்துகொள்ளும் பதிவுசெய்யப்பட்ட மிக முக்கிய உதைப்பந்தாட்ட அகடமிகள் பங்குக்கொள்ளும் குறித்த தொடரில் புத்தளத்திலிருந்து எருக்கலம்பிட்டி யூத் கழகத்தின் யூத் புட்போல் அகடம்மி கலந்துகொள்வதால் புத்தளம் உதைப்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆசிரியர் அமீன் அன்சப் அவர்களின் மிகுந்த வழிகாட்டளிலும், ஒழுங்குபடுத்தளிலும் களம் காணும் எருக்கலம்பிட்டி யூத் புட்போல் அகடமிக்கு நிஜாம் ருசான், நிஜாம் சம்ஹான், நைசல் நுஸ்ரி ஆகியோர் இணைந்து தொடர்ச்சியாக பயிற்சியளித்து வருகின்றனர்.

இளம் வீரர்களின் ஆற்றலை வெளிக்கொணர வயது 14க்கு உட்பட்டோர் (U-14) மற்றும் வயது 16க்கு உட்பட்டோர் (U-16) என இரு பிரதான பிரிவுகளில் தலா 22 அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் லீக் முறையிலான குழுநிலைப் போட்டிகள் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு அனல் பறக்கும். அதிலிருந்து தப்பிப் பிழைத்து முன்னேறும் அணிகள், அக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறுதி நாக்-அவுட் மற்றும் சம்பியன்ஷிப் சுற்றுகளில் மரணப் போரட்டத்தில் மோதவுள்ளன.

அடிமட்ட கால்பந்து கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதே இதன் முதன்மை நோக்கம் என FFSL தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ள அதேவேளை, எதிர்காலத்தில் இலங்கை தேசிய அணியின் கதவுகளைத் திறப்பதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இதுவென மான்செஸ்டர் அகடாமியின் தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஆஸ்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.

சாம்பியன் கிண்ணத்தோடு சிறந்த வீரர், கோல்டன் பூட், சிறந்த கோல்கீப்பர் போன்ற உயரிய தனிநபர் விருதுகளும் வீரர்களுக்காகக் காத்திருக்கின்றன.

கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் பிரதான அரங்கில் அமர்ந்து நேரடி உற்சாகத்தை வழங்க எவ்வித நுழைவுக் கட்டணமும் இன்றி இலவச அனுமதி குறித்த போட்டிகளை காண வழங்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் கொழும்பு ரேஸ்கோர்ஸில் முழங்கவுள்ள இளைய தலைமுறையின் கோல் ஆரவாரத்தைக் காண கால்பந்து ரசிகர்கள் மைதானத்தில் திரளத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular