Sponsored Advertisementspot_img
HomeLocal Newsஇலங்கை தென்னை தொழில்துறைக்கு பேரிடி: முடங்கும் ஏற்றுமதி!

இலங்கை தென்னை தொழில்துறைக்கு பேரிடி: முடங்கும் ஏற்றுமதி!

ஜூட் சமந்த

இலங்கையின் தூய தேங்காய் எண்ணெய்க்கு லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது அபரிமிதமான கேள்வி நிலவி வருகிறது. ஆனால், சர்வதேச சந்தையில் கொட்டிக்கிடக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாதவாறு, வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ள கப்பல் கட்டணங்கள் இலங்கை ஏற்றுமதியாளர்களை நிலைகுலையச் செய்துள்ளன.

வழமையாக ஒரு மாதத்திற்கு 12 முதல் 15 மெட்ரிக் தொன் தேங்காய் எண்ணெய் கொண்ட 5 முதல் 8 கொள்கலன்கள் வரை இலங்கை வர்த்தகர்களால் சர்வதேச சந்தைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. அப்போதெல்லாம் ஒரு கொள்கலனுக்கான கப்பல் சரக்குக் கட்டணம் வெறும் 2,500 முதல் 3,000 டொலர்களாகவே காணப்பட்டது. ஆனால், திடீரென எகிறியுள்ள இக்கட்டணம் தற்போது 12,500 முதல் 14,000 டொலர்கள் வரை எட்டியுள்ளமை ஏற்றுமதியாளர்களின் தலையில் இடியாக இறங்கியுள்ளது.

வெளிநாட்டுச் சந்தை ஒருபுறம் கைநழுவ, மறுபுறம் உள்ளூர் சந்தையிலும் மூலப்பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு நிற்கிறது. அண்மைய காலம் வரை ரூபா 100 ஆக விற்பனையான தேங்காய் ஒன்றின் விலை தற்போது ரூபா 120-ஐ தாண்டியுள்ளது. அதேபோல், தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு இன்றியமையாத உலர்ந்த தேங்காய்த்தூளின் (DC) விலை கிலோ ஒன்றுக்கு ரூபா 150 – 160 இலிருந்து ரூபா 195 – 200 வரை எகிறியுள்ளது.

இவ்வளவு அதிக விலை கொடுத்து மூலப்பொருட்களை வாங்கி எண்ணெய் உற்பத்தி செய்தாலும், சர்வதேச சந்தையில் நிலவும் போட்டி காரணமாக உற்பத்தி விலைக்கு ஏற்ப விற்பனை விலையை அதிகரிக்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, முன்னைய காலங்களில் கிடைத்த 20 வீத லாபம் தற்போது வெறும் 2 வீதமாகச் சுருங்கி, வர்த்தகர்களைப் பெரும் நட்டத்திற்குள் தள்ளியுள்ளது.

வெளியிலும் ஏற்றுமதி செய்ய முடியாமல், சரி உள்ளூர் சந்தையிலாவது விற்பனை செய்யலாம் என்றால் அங்கேயும் விடிவு இல்லை. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மற்றும் மாற்றுச் சமையல் எண்ணெய்களின் விலைகள் உள்நாட்டில் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதால், உள்ளூர் சந்தையிலும் தேங்காய் எண்ணெயை நியாயமான விலைக்கு விற்க முடியாத இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, நாடளாவிய ரீதியில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான 50-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த நெருக்கடிக்கு உரிய தீர்வு உடனடியாக எட்டப்படாவிட்டால், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த ஆலைகளில் பெரும்பாலானவை மூடப்படும் சூழல் தவிர்க்க முடியாததாகிவிடும். அவ்வாறு நிகழ்ந்தால், தொழில்துறை அழிவடைவதுடன் இலங்கைக்கு ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய பாரிய அளவிலான அந்நியச் செலாவணியும் முற்றாக இல்லாது போகும் என வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular