Sponsored Advertisementspot_img
HomeERUKKALAMPIDDYசாதனைச் சரித்திரம் படைத்த எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரி!

சாதனைச் சரித்திரம் படைத்த எருக்கலம்பிட்டி மகளிர் கல்லூரி!

  • சாதனைச் சரித்திரம் படைத்த எருக்கலம்பிட்டடி கல்லூரி: மன்னார் மக்கள் வங்கி நேரில் சென்று கௌரவிப்பு!
  • மன்னாரில் 100% சித்தி, அதிகூடிய புள்ளிகள்: புலமைப்பரிசில் பரீட்சையில் முத்திரை பதித்த மாணவிகள்!
  • மாவட்டத்தில் முதலிடம்: எருக்கலம்பிட்டு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மக்கள் வங்கியின் விசேட பாராட்டு!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரி மாபெரும் சாதனையைப் பதிவு செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். அஸ்மி அவர்களின் மிகவும் திறமையான நிர்வாகத்தில் இயங்கும் குறித்த கல்லூரி, மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பாடசாலையாகவும், வீதாசார அடிப்படையில் மிகச் சிறந்த பாடசாலையாகவும் இக்கல்லூரி புதிய சாதனை படைத்துள்ளது.

இச்சாதனையின் சிறப்பம்சமாக, மாவட்டத்தில் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவிகளுமே 100% சித்தி எய்திய ஒரேயொரு பாடசாலையாகவும், அதிகூடிய வீதாசாரத்தில் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட பாடசாலையாகவும் இக்கல்லூரி திகழ்கின்றது. இவ்வாறான முப்பெரும் வெற்றிகளைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக, மன்னார் மக்கள் முகாமையாளர் ஜனாப் ஹக் முஹம்மது அரூஸ் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலையில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த ஐந்து மாணவிகளையும், அவர்களின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களையும் மன்னார் மக்கள் வங்கியின் முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று பாராட்டிக் கௌரவித்தனர்.

பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்ற இந்த உணர்வுபூர்வமான கௌரவிப்பு நிகழ்வில், பாடசாலையின் ஆசிரியர்கள், சாதனை மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். மாவட்டத்திற்கே பெருமை சேர்த்த இந்த மாணவிகளின் சாதனைக்கு நாலாபுறமிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular