Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகற்பிட்டி கடற்படை முகாமில் பரபரப்பு: மாயமான T56 துப்பாக்கி!

கற்பிட்டி கடற்படை முகாமில் பரபரப்பு: மாயமான T56 துப்பாக்கி!

  • கடற்படை படகிலிருந்து மாயமான T56 துப்பாக்கி மயானத்தில் மீட்பு: பின்னணியில் பெரும் சதிவலை!
  • 10 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட T56: ரணால மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த மர்மம் உடைந்தது!
  • கற்பிட்டி கடற்படை முகாமில் பரபரப்பு: T56 துப்பாக்கியுடன் சிக்கிய கடற்படை வீரர்!

ஜுட் சமந்த

கற்பிட்டி ‘விஜய’ கடற்படை முகாமிற்குச் சொந்தமான ரோந்துப் படகின் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து அதிநவீன T-56 ரக துப்பாக்கி ஒன்று திடீரென மாயமாகிய விவகாரம் பாதுகாப்புத் தரப்பினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 6ஆம் திகதி முகாமின் ஒழுக்காற்றுப் பொறுப்பதிகாரியினால் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் இது தொடர்பில் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டைத் தொடர்ந்து களமிறங்கிய புத்தளம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முகாமில் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். அங்கு கடமையாற்றி வந்த போத்தல – படகொட பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்படை தொழில்நுட்பச் சிப்பாய் ஒருவரே இந்த நாசகாரச் செயலில் ஈடுபட்டது விசாரணைகளில் உறுதியானது.

கைது செய்யப்பட்ட சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. ரோந்துப் படகிலிருந்த T56 துப்பாக்கியைத் தான் திருடி, கற்பிட்டிக்கு வந்த அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த இரு நபர்களிடம் ஒப்படைத்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

விவகாரத்தின் பாரதூரத்தன்மையை உணர்ந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைத்தனர். விசாரணையை கையில் எடுத்த CID அதிகாரிகள், துப்பாக்கியைப் பெற்றுச் சென்ற அந்த மர்ம நபர்கள் இருவரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.

அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட சிஐடி அதிகாரிகள், ரணால பகுதியிலுள்ள மயானம் ஒன்றிற்குச் சென்று அங்கு மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த T56 துப்பாக்கியை மீட்டெடுத்தனர்.

மீட்கப்பட்ட இந்த அதிபயங்கர துப்பாக்கியானது, தென் பகுதியை மையமாகக் கொண்டு இயங்கும் பாரிய பாதாள உலகக் குற்றக் குழு ஒன்றிற்கு 10 இலட்சம் ரூபாவிற்கு கைமாற்றப்படவிருந்த அதிர்ச்சித் தகவலும் இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் கைதான மூவரிடமும் சிஐடி அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular