Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளத்தில் இரவு நேர கோர விபத்து: 62 வயதுப் பெண் பலி!

புத்தளத்தில் இரவு நேர கோர விபத்து: 62 வயதுப் பெண் பலி!

  • புத்தளத்தில் இரவு நேர கோர விபத்து: 62 வயதுப் பெண் பலி – 21 வயது இளைஞருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
  • மருத்துவமனைக்கே நேரில் சென்ற நீதவான்: புத்தளம் விபத்து வழக்கில் வெளியான முக்கிய திருப்பம்!
  • புத்தளம் – அனுராதபுரம் வீதியில் துயரம்: உயிரைக் குடித்த மோட்டார் சைக்கிள் விபத்து; சந்தேகநபருக்கு 5 இலட்சம் பிணை!

ஜுட் சமந்த

புத்தளம் – அனுராதபுரம் பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் 62 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரை, தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு புத்தளம் பதில் நீதவான் நேற்று (23) மாலை உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 22-ஆம் திகதி இரவு 9.55 மணியளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 2-ஆம் கட்டைப் பகுதியில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த புத்தளம், பாரிஸ்டர் கார்டன் பகுதியைச் சேர்ந்த தேவாலமுனிகே ஸ்ரீயாணி மங்களிகா சில்வா (வயது 62) என்பவர் உடனடியாகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வெளிநோயாளர் பிரிவு வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளைச் செலுத்திய புத்தளம், சிரம்பியடி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞரைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்ததுடன், மோட்டார் சைக்கிளையும் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். விபத்தில் காயமடைந்த சந்தேகநபரும் சிகிச்சைக்காகப் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், விபத்து நேர்ந்த வேளையில் அவர் மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பாவனையிலோ இருக்கவில்லை என்பது வைத்தியப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து புத்தளம் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவினர் ‘B’ அறிக்கை ஊடாக நீதிமன்றத்திற்குத் தகவல் வழங்கியதையடுத்து, நீதவானின் பணிப்புரைக்கமைய பதில் நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபரைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, சந்தேகநபரின் சிகிச்சைகள் நிறைவடைந்ததும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் அவரை விடுவிக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புத்தளம் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட்களான திலகரத்ன (48339) மற்றும் நிலந்த (8600) ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular