Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசிங்கம், புலி ‘டெட்டூ’ குத்தப் போய் கடைசில சொறி, சிரங்கு!

சிங்கம், புலி ‘டெட்டூ’ குத்தப் போய் கடைசில சொறி, சிரங்கு!

  • அழகுக்காக ‘டெட்டூ’ குத்தி ஆபத்தை விலைக்கு வாங்குகிறீர்களா? சுகாதாரப் பரிசோதகர்கள் விடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை!
  • இலங்கையில் கட்டுப்பாடின்றி நடக்கும் ‘பச்சை குத்தும்’ கலாசாரம்: இளைஞர்களின் உயிருக்கு உலை வைக்கும் கிருமித்தொற்று அபாயம்!
  • காலாவதியான மை, கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள்! இலங்கையில் ‘டெட்டூ’ மோகத்தால் பரவும் மர்ம சரும நோய்கள்?

ஜுட் சமந்த

கொழும்பு: இன்றைய நவீன யுகத்தில் இளைஞர், யுவதிகள் மத்தியில் ‘பச்சை குத்துதல்’ (Tattoo) என்பது ஒரு தவிர்க்க முடியாத நாகரிகக் கலையாக மாறியுள்ளது. ஆனால், இந்த அழகுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சுகாதார அபாயங்கள் குறித்து யாராவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? இலங்கையில் இக்கலைக்கு முறையான அங்கீகாரமும் ஒழுங்குமுறையும் அவசியம் என இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் பதில் தலைவர் உபுல் ரோஹண விடுத்துள்ள எச்சரிக்கை இப்போது பேசுபொருளாகியுள்ளது.

இலங்கையில் மட்டுமன்றி மேற்கத்தேய நாடுகளிலும் பச்சை குத்தும் கலை மிகவும் பிரபல்யமானதுதான். ஆனால், வெளிநாடுகளுக்கும் நமது நாட்டிற்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் காணப்படுகிறது. வெளிநாடுகளில் முறையான பயிற்சியும் கடுமையான சுகாதாரக் கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படுகின்றன. ஆனால், இலங்கையில் எவ்வித பொறுப்புக்கூறலும் இன்றி, எந்தவொரு மருத்துவப் பரிசோதனையுமின்றி யார் வேண்டுமானாலும் பச்சை குத்திக்கொள்ளலாம் என்ற நிலைமை நிலவுவது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

உண்மையான ஆபத்து எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா?

பச்சை குத்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் உபகரணங்கள் முறையாகக் கிருமி நீக்கம் (Sterilize) செய்யப்படுகின்றனவா என்பதை எவரும் கவனிப்பதில்லை. அதுமட்டுமன்றி, சருமத்திற்குள் செலுத்தப்படும் வண்ண மை வகைகள் (Pigments) ஒருவரின் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துமா அல்லது அவை காலாவதியானவையா என்று கூட யாரும் ஆராய்வதில்லை. இதன் விளைவாக, இறுதியில் எதிர்பாராத விதமாக உடல் முழுவதும் பாரிய சரும நோய்கள் ஏற்பட்ட பின்னரே பலரும் விழித்துக்கொள்கிறார்கள்.

மிகவும் கடுமையான சுகாதாரப் பாதுகாப்புடன் கிருமி நீக்கம் செய்யப்படும் வைத்தியசாலை உபகரணங்களாலேயே சில வேளைகளில் ஒவ்வாமை நிலைமைகள் ஏற்படுவதாகப் பதிவாகியுள்ளன. அப்படியிருக்க, எவ்விதக் கிருமி நீக்கமும் செய்யப்படாத சாதாரண உபகரணங்களைக் கொண்டு பச்சை குத்தும்போது எத்தனை விதமான ஆபத்தான நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என உபுல் ரோஹண சுட்டிக்காட்டுகிறார்.

இறுதியாக அவர் ஒன்றை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்: “பச்சை குத்தும் கலையைச் செய்ய வேண்டாம் என நாம் ஒருபோதும் கூறவில்லை. முறையான பயிற்சியும், சுகாதார ஒழுங்குமுறையும் கொண்ட கட்டமைப்பிற்குள் இக்கலையை முன்னெடுங்கள் என்பதே எமது கோரிக்கை. அவ்வாறு செய்தால் மட்டுமே, அழகுக்காகச் சென்று ஆரோக்கியத்தை இழக்கும் தேவையற்ற நோய்களிலிருந்து எமது இளைய தலைமுறையைப் பாதுகாக்க முடியும்.”

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular