செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சியானது பாரியளவு ஆபத்தை ஏற்படுத்தும் என செயற்கை நுண்ணறிவின் தந்தை என அழைக்கப்படும் ஜெஃப்ரி ஷிண்டன் எச்சரித்துள்ளார்.
one decision பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் அதனை தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
AI தொழில்நுட்பத்தால் ஏற்படவிருக்கும் மிக பெரிய ஆபத்துக்களை மென்பொருள் நிறுவனங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், AI யினால் ஏற்படவிருக்கும் ஆபத்து குறித்து அவர்கள் நன்கு அறிந்திருந்த போதிலும், அவற்றை வெளியுலகிற்கு அறியப்படுத்தாது மறைத்துவருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.