புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழகத்திற்கு (EFC) உயர் தரத்திலான கால்ப்பந்துகள் வழங்கும் நிகழ்வு பு/எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழக காரியாலயத்தில் EFC யின் தலைவர் திரு இம்ரான் தலைமையில் இன்று இடம்பெற்றது.
புத்தளம் பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பொத்துவில்லு வட்டார உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், புத்தளம் எருக்கலம்பிட்டி உதைப்பந்தாட்ட கழகத்திற்கு (EFC) உயர் தரத்திலான 10 கால்ப்பந்துகள் EFC யின் தலைவர் திரு இம்ரான் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது.
புத்தளம் மண்ணில் உதைப்பந்தாட்ட துறையில் புதிய சரித்திரம் படைத்துவரும் EFC அணியின் வளர்ச்சிக்கும், நேர்த்தியான பயிற்சிக்கும் வலு சேர்க்கும் வகையில், உயர் தரத்திலான 10 கால்ப்பந்துகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.
EFC அணியின் முக்கிய தேவைகள் அறியப்பட்டு, அவர்களுக்கான கால்ப்பந்துகள் முதல் கட்டமாக ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், பாடசாலை மைதானத்தின் சில குறைபாடுகள் குறித்து EFC யின் தலைவர் திரு இம்ரான் அவர்களினால் பிரதேச சபை உறுப்பினர் ஜனாப் ஷாஹீன் ரீசா அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மைதானத்தின் தற்போதைய குறைபாடுகளை கேட்டறிந்துகொண்ட பிரதேச சபை உறுப்பினர், அவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை முதல் கட்டமாக தாம் செய்து தருவதாக தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜனாப் சதக்கத்துல்லா ரிஜாஜ், ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தரும், வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினருமான ஜனாப் M.S.நாசர், ஓய்வுபெற்ற ஆசிரியர் நஜீம், EFC அணியின் பயிற்றுவிப்பாளர், EFC நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாகவில்லு கிளை உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



