Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal NewsIMF நித்திக்கடன் தொடர்பில் ஜனாதிபதியின் செய்தி

IMF நித்திக்கடன் தொடர்பில் ஜனாதிபதியின் செய்தி

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே, நிதி நிறுவனங்களுடனும் கடன் வழங்குபவர்களுடனும் நடத்திய அனைத்து பேச்சுவார்த்தைகளும் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்பட்டன.

தூர நோக்கான பொருளாதாரக் கொள்கை மற்றும் எமது இலட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மூலம் பொருளாதாரம் நீண்ட கால மீட்சியை எதிர்பார்க்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச பங்காளிகள் அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular