மற்றுமொரு கோர விபத்தில் மூவர் பலி!

22 views

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். 

நாரம்மல பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்மல-கிரியுல்ல வீதியில் நேற்று (19) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

9 மற்றும் 11 மாதங்களேயான இரண்டு குழந்தைகளும் 38 வயதான சாரதியுமே இவ்வாறு உயிரிழந்ததுடன், இவர்கள் திவுல்லெவ, மஹாவ பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணி ஒருவரும் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை நேற்று இடம்பெற்ற மீமுரே விபத்தில், வேனில் பயணித்த 6 பேரில் நால்வர் இதுவரை மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.