Wednesday, March 25, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeWorld Newsஅமெரிக்காவின் இனிப்புப் பேச்சுக்கு இடமில்லை! அணுசக்தி முடிவே சரி!

அமெரிக்காவின் இனிப்புப் பேச்சுக்கு இடமில்லை! அணுசக்தி முடிவே சரி!

ஈரான் உடனான அமெரிக்காவின் போரை பார்க்கையில் தனது நாடு அணு ஆயுதங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்த முடிவு சரியானது என்பதை நிரூபிக்கிறது என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் அழுத்தத்தையும், அதன் இனிமையான பேச்சுகளையும் வட கொரியா நிராகரித்தது நியாயம்தான் என்பதை தற்போதைய சூழல் தெளிவாகக் காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டின் அணுசக்தி அந்தஸ்தை திரும்பபெற முடியாதபடி உறுதிப்படுத்துவதாகவும், அதே நேரத்தில் தென் கொரியா மீது கடுமையான நிலைப்பாட்டைத் தக்கவைத்துக் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

நேற்று முன்தினம் பியோங்யாங்கின் ஒப்புதல் அளிக்கும் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், மத்திய கிழக்கில் நடக்கும் போரைக் குறிப்பிடுவது போல, அமெரிக்கா உலகளாவிய “அரச பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு” செய்வதாக கிம் குற்றம் சாட்டினார்.

மேலும், அதிகரித்து வரும் அமெரிக்க எதிர்ப்பு உணர்வுகளுக்கு மத்தியில், வாஷிங்டனுக்கு எதிரான ஒரு ஐக்கிய முன்னணியில் வட கொரியா மிகவும் வலுவான பங்கை வகிக்கும் என்றும் அவர் கூறினார். ஆனால், கிம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை.

மேலும், தனது எதிரிகள் “மோதலைத் தேர்ந்தெடுக்கிறார்களா அல்லது அமைதியான சகவாழ்வைத் தேர்ந்தெடுக்கிறார்களா என்பது அவர்களைப் பொறுத்தது, எந்தவொரு தேர்வுக்கும் பதிலளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றும் கூறினார்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular