முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே சம்பவம் தொடர்பில் முதன்முதலில் வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு, மல் வீதியில் உள்ள தனது பிரச்சார அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர்களான டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் முன்னிலையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
“அந்த தாக்குதல் பற்றிய முதல் தகவல் எங்கள் காலத்தில் வந்தது. நானும் அறுகம்பே சென்றேன். அதிக கவனம் செலுத்தவே நானாக சென்றேன். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, நாங்கள் எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தோம். தூதரகங்களுக்கு தகவல் தெரிவித்தோம்.
ஆனால் தற்போதைய அரசாங்கம் செய்தது அமெரிக்காவின் எச்சரிக்கையைக் கண்டவுடன் பொலிஸாரையும் இராணுவத்தையும் அறுகம்பேக்கு அனுப்பியது. இதைக் கண்டு ஏனைய நாடுகள் அச்சமடைந்தன. அந்த பகுதிகளுக்கு நாம் STF ஐ அனுப்பியது போதைப்பொருள் கடத்தலை தடுக்க என்று வேறுபட்ட உத்தியை கையாண்டாகும்.. அதை வைத்தே ஆபத்து குறித்த தகவல்களை சேகரித்தேன்’’ என்றார்.