Sponsored Advertisement
HomeSportsஅவுஸ்தியரேலிய பாராளுமன்றம் சென்ற ரோஹித் சர்மா, நடந்தது என்ன?

அவுஸ்தியரேலிய பாராளுமன்றம் சென்ற ரோஹித் சர்மா, நடந்தது என்ன?

இந்திய- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது மனைவிக்குப் பிரசவத்தில் இரண்டாவது குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்டில் ரோகித் சர்மா விளையாடவில்லை.

எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தற்போது அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

இந்நிலையில், அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு ரோகித் ஷர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நேற்றையதினம் (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரோகித் சர்மா,

இந்திய- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே விளையாட்டிலும் சரி, வர்த்தகத்திலும் சரி நீண்ட காலம் நட்புறவு இருந்து வருகிறது.

பல ஆண்டுகளாக இங்கு வந்து கிரிக்கெட்டை உற்சாகமாக விளையாடி வருகின்றோம்.

அவுஸ்திரேலிய மண்ணில் கிரிக்கெட் ஆடுவது எப்போதும் சவாலானது. முந்தைய தொடர்களிலும், கடந்த வாரத்திலும் இங்கு வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம். அதே உத்வேகத்துடன் அடுத்து வரும் போட்டிகளையும் எதிர்கொள்ள ஆர்வமாக உள்ளோம்.

அதே சமயம் அவுஸ்திரேலியாவின் கலாச்சாரத்தை மதிக்கிறோம். வரும் வாரங்களில் அவுஸ்திரேலிய மக்களையும், இந்திய இரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version