Sponsored Advertisement
HomeLocal Newsகுடும்பத்தின் உயிரையே காப்பாற்றிய நாய்

குடும்பத்தின் உயிரையே காப்பாற்றிய நாய்

களுத்துறை, தொடங்கொட பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கமகொட பகுதியில் நாயினால் குடும்பம் ஒன்று காப்பாற்றப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்றுடன் காற்று காரணமாக புளியமரத்தின் கிளையொன்று வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது.இதன் காரணமாக வீடு முற்றாக இடிந்துள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் காரணமாக வீட்டில் உள்ளவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.அதிகாலை 2 மணியளவில் வீட்டு உரிமையாளரின் படுக்கையறையின் படுக்கைக்கு அருகில் வந்த நாய் நுளம்பு வலையை கடித்து கிழித்ததுடன், வீட்டு உரிமையாளரின் ஆடை கடித்து இழுத்துள்ளது.வீட்டின் ஏனையவர்கள் உறங்கும் அறைக்கும், உரிமையாளரை இழுத்து சென்ற நாய், அவர்களையும் வெளியே அழைத்து சென்றுள்ளது.

குடும்பத்தினர் வெளியே வந்து சில நிமிடங்களின் மரத்தின் கிளை வீட்டின் கூரையின் மீது விழுந்துள்ளது. வீட்டின் சமையலறையின் சுவர்கள் கட்டிலின் மீது விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாயின் செயற்பாட்டினால் அனைவரும் விழிந்துக் கொண்டமையால், உயிராபத்தில் இருந்து தப்பியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version