பொன்னியின் செல்வன் பட பாடல் தொடர்பான வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் ‘வீரா ராஜ வீர’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இத்தகைய, வீர ராஜ வீரா பாடலில் உஸ்தாத் பயாஸ் என்பவரது பாடலை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
சிவ ஸ்துதி என்ற பாடல் போன்று பொன்னியின் செல்வன் பட பாடல் இருப்பதாக இந்துஸ்தானி கிளாசிக்கல் பாடகர் ஃபயாஸ் வசிஃபுதின் தாகர் மனுதாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையில், வீரா ராஜ வீர பாடலின் காப்புரிமை தொடர்பான வழக்கில் ரூ.2 கோடியை செலுத்துமாறு தனி நீதிபதி ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இத்தகைய தனிநீதிபதி உத்தரவுக்கு எதிராக ஏ.ஆர்.ரஹ்மான் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஹரிசங்கர், ஓம் பிரசாத் சுக்லா தலைமையிலான அமர்வு தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.