உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 37ஆவது போட்டி இன்று(5) இடம்பெற்றது.
குறித்த போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 05 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக, விராட் கோலி 101 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 49ஆவது சதம் இதுவாகும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்களை பெற்றிருந்தார்.
இந்தநிலையில், இன்றைய தினம் விராட் கோலி பெற்ற சதத்துடன், சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
அத்துடன், இந்திய அணிசார்பில் ஸ்ரேயாஷ் ஐயர் 77 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மகாராஜ் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தநிலையில், 327 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி .. ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து … ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
அணிசார்பில் அதிகபடியாக மெர்கோ ஜொன்சன் 14 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய தென்னாபிரிக்க அணியின் ஏனைய வீரர்கள் 14க்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்றனர்.
பந்துவீச்சில், ரவீந்திர ஜடேஜா 33 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.