இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் குறித்தும் தனது வருங்கால திட்டம் குறித்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது. ஒரு பக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், மறுபறம் இஸ்ரேலில் புகுந்தும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றன. இந்த தாக்குதலால் முதலில் இஸ்ரேல் ஆட்டம் கண்டாலும் கூட பதில் தாக்குதலை ஆரம்பித்தது. முதலில் காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், மெல்லப் படையெடுப்பையும் ஆரம்பித்து பல்லாயிரக்கணக்கான சிறுவர்களையும் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து வருகின்றது. இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன்மின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த சண்டை ஹமாஸுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், இந்த சண்டையை வைத்து காசாவைக் கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ இஸ்ரேல் முயலவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்க பாலஸ்தீனிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ராணுவம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். காசா பாதுகாப்புக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சரியானது இல்லை என்று சமீபத்தில் அமெரிக்கா கூறி இருந்தது. மேலும், இஸ்ரேல் ஹமாஸ் சண்டை முடிந்த பிறகும் கூட, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் பைடன் கடந்த வாரம் தான் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதை ஆமோதிக்கும் வகையில் இப்போது இஸ்ரேலும் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், நாங்கள் காசாவைக் கைப்பற்ற முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்க முற்படவில்லை, காசாவை ஆள வேண்டும் என்பதும் எங்கள் திட்டமில்லை. காசாவில் ஒரு மக்கள் ஆட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் திட்டம். அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுத்து வருகிறோம் என்று நெதன்யாகு கூறியிருப்பது முழு உலகையும் கேளிக்கைக்கு உள்ளாக்கி இருப்பதாக மேற்குலகம் குற்றம் சுமத்தியுள்ளது அதேநேரம் கடந்த அக். 7ஆம் தேதி நடந்த தாக்குதலைப் போல மற்றொரு தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்கள் ராணுவத்தில் ஒரு பகுதி தேவைப்பட்டால், காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ரெடியாக இருக்கிறது. இதைச் செய்தால் மட்டுமே ஹமாஸ் படையை முழுமையாக அழிக்க முடியும். ஹமாஸ் மீண்டும் வராமல் தடுக்க இது மட்டுமே ஒரே வழி என்று தெரிவித்தார். இந்த சண்டைக்குப் பிறகு காசாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டமில்லை. இப்போது ஹமாஸ் தான் அங்கே வீரர்களைக் குவித்துள்ளனர். அந்த நிலையை மாற்றி, காசாவை மக்கள் வாழக் கூடிய நகராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார். காசாவை மக்கள் வாழக் கூடிய நகராக மாற்ற வேண்டும் என்று கூறியுள்ள நெதன்யாகு அங்கு அனைத்து மக்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், யார் கொன்று குவித்தார்கள் என்பது பற்றி தெரியாதது போல் பேசியிருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. மனிதர்கள் வாழ்ந்த இடங்களை சீர்குலைத்து அணைத்து கட்டிடங்களும் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டு எந்த மக்களை அங்கு நிம்மதியாக வாழ வைக்க நினைக்கிறார் இந்த இஸ்ரேல் பிரதமர் என்பது அனைவரின் வினாவாக உள்ளது. சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி மக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தினசரி 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்த விடயம் தற்போது இஸ்ரேலை சமாதானத்தை விரும்பும் நாடாக காண்பிக்க முயல்கிறது இஸ்ரேலிய மேற்குலகம். |
இஸ்ரேல் பிரதமரின் விஷம் கலந்த பதில்
RELATED ARTICLES