உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தை தற்போதைய அரசாங்கம் முழுமையாக அரசியல் மயமாக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (20) நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
முன்னாள் அமைச்சர் பிள்ளையான் மற்றும் முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே ஆகியோரின் கைதுகள் மற்றும் விசாரணைகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான புலனாய்வுத் தகவல்களை மூடி மறைத்தவர்களே தற்போது விசாரணைகளை முன்னெடுப்பது ஒரு வேடிக்கையான விடயம்.
ஜே.வி.பி-யின் தேசியப் பட்டியலில் இருந்த இப்ராஹிமின் புதல்வர்களே இத்தாக்குதலில் ஈடுபட்டனர். தனது கட்சிக்கு நிதி வழங்கியவர்களைப் பாதுகாத்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது நியாயமற்றது எனத் தெரிவித்துள்ளார்.


