சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடிப்பில் கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த படம் ‘புஷ்பா-2’. இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை செய்தது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 400 கோடி வசூல் செய்த நிலையில் இந்த புஷ்பா-2 படமோ உலக அளவில் 1800 கோடி வசூல் செய்து இந்திய அளவில் 2024ம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக முதலிடம் பிடித்தது.
அதையடுத்து இப்படம் திரைக்கு வந்து ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியிடப்பட்ட போதும், உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்ததோடு, தற்போது ஓடிடி தளத்திலும் உலக அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதன் மூலம் புஷ்பா-2 படம் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ரசிகர்களை கவர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது என்று அப்படக்குழு ஒரு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
