Sponsored Advertisement
HomeERUKKALAMPIDDYஎருக்கலம்பிட்டி வைத்தியருக்கு உயரிய விருது

எருக்கலம்பிட்டி வைத்தியருக்கு உயரிய விருது

அகில இலங்கை ஆயுர்வே தவைத்திய சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யபட்டிருந்த விருது வழங்கல் மற்றும் வருடாந்த கூட்டம் 2022.6.17 இன்று குருநாகல் ஆயுர்வேத திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இதில் ஆயுர்வேததுறையில் ஆயுர்வேத மருந்து உற்பத்தி, ஆயுர்வேத மூலிகை பண்னை, தொழில் பயிற்சி நிலையம், ஆயுர்வேத கல்வி நிலையம், பாரம்பரிய அருங்காட்சியகம், ஆகிய முக்கிய அம்சங்கள் உள்வாங்கப்பட்டு மிகவும் வெற்றிகரமாக செயற்படும் வைத்தியர்களுக்கு மாத்திரம் “ஆயுர்வேத விசாரித பண்டித” விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது எருக்கலம்பிட்டியை சேர்ந்த தேசகீர்த்தி, தேசபந்து, தேசமான்ய, வைத்திய சிரோன்மனி Dr.பி.எம்.எம்.சாலின் அவர்களுக்கு இன்றைய தினம் கிடைக்கபெற்றுள்ளது.

மன்னார் எருக்கலம்பிட்டியில் தனது ஆரம்பக்கல்வியை பூர்த்தி செய்த Dr.பி.எம்.எம். சாலின் அவர்களுக்கு
கடந்த ஏப்ரில் மாதம் 29ம் திகதி பதுளை ஆயுர்வேத சம்மேளனத்தினால் “வைத்திய சிரோன்மணி எனும் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவ்விருதினை இலங்கையில் பெற்றுக்கொண்ட ஒரே ஒரு முஸ்லிம் வைத்தியர் எருக்கலம்பிட்டியை சேர்ந்த  Dr.பி.எம்.எம்.சாலின் என்பது குறிப்பிடதக்கது.

இவரின் இவ்வளர்ச்சிக்கு ஊர் மக்கள் மற்றும் வைத்திய சமூகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை விஷேட அம்சமாகும்.

Exit mobile version