Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகற்பிட்டியில் அடித்துக் கொல்லப்பட்டு குழியில் வீசப்பட்ட குடும்பஸ்தர்!

கற்பிட்டியில் அடித்துக் கொல்லப்பட்டு குழியில் வீசப்பட்ட குடும்பஸ்தர்!

  • நள்ளிரவில் அடித்துக் கொல்லப்பட்டு குழியில் வீசப்பட்ட குடும்பஸ்தர்: கற்பிட்டியைக் குலுக்கிய கள்ளக்காதல் விவகாரம்!
  • “என் மனைவியுடன் தொடர்பா?”: 12 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் வீசப்பட்ட சடலம் – வெளியான பகீர் வாக்குமூலம்!
  • கற்பிட்டி ஆடைக் கைத்தொழில்சாலை வத்தையில் மிதந்த உடலம்: சில மணிநேரங்களில் கொலையாளியை வளைத்துப்பிடித்த நுரைச்சோலைப் பொலிஸார்!

ஜூட் சமந்த

கற்பிட்டி – சேதாபொல பகுதியில் கடந்த 19 ஆம் திகதி அதிகாலை வேளையில் அமைதியைச் சீர்குலைத்த கொடூரச் சம்பவமொன்று பிரதேச மக்களையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சேதாபொல, நாயக்கராச்சேனை வீதியைச் சேர்ந்த வடிவேல் செந்தூர் (வயது 45) என்பவர், அதேபகுதியிலுள்ள ஆடைக் கைத்தொழில்சாலைக்குச் சொந்தமான வத்தையிலுள்ள நீர் நிறைந்த பள்ளமொன்றில் விழுந்து கிடப்பதாக நுரைச்சோலைப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததும் சற்றும் தாமதிக்காமல் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த நபரை உடனடியாக மீட்டு புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண விபத்தாக இருக்கலாம் என்ற கோணத்தில் பார்க்கப்பட்டாலும், உயிரிழந்தவரின் உடலில் காணப்பட்ட கொடூரமான காயங்களும் வீக்கங்களும் வழக்கை முற்றிலும் வேறொரு திசைக்கு நகர்த்தின.

சந்தேகமடைந்த நுரைச்சோலைப் பொலிஸார் தடயங்களைச் சேகரித்து களத்தில் தீவிர விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் விளைவாக, பாலாவிய – கரம்ப பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் துரிதமாகக் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு மரப் பொல்லுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையின்போதே நெஞ்சை பதறவைக்கும் தகவல்கள் வெளிவந்தன. கடந்த 19 ஆம் திகதி அதிகாலை 2.00 மணி முதல் 2.30 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இக்கொலை அரங்கேறியுள்ளது. தனது மனைவியுடன் வடிவேல் செந்தூர் நீண்டகாலமாக முறைகேடான கள்ளக்காதல் தொடர்பைப் பேணிவந்ததாகவும், இதனால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத ஆத்திரத்தின் காரணமாகவே அவரை மரப்பொல்லுகளால் கொடூரமாகத் தாக்கியதாகவும் சந்தேகநபர் ஒப்புக்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளாகி நிலைகுலைந்தவரைச் சும்மா விடாது, சுமார் 12 மீற்றர் தூரம் தரையோடு தரையாக இழுத்துச் சென்று தண்ணீர் நிறைந்த பள்ளத்தில் தள்ளிவிட்டுத் தப்பியோடியதாகவும் அவர் பொலிஸ் விசாரணையில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், நுரைச்சோலைப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.ஜி.எம்.பி. விமலசிரி உள்ளிட்ட சிறப்புக் குழுவினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular