Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகற்பிட்டியில் சாதித்த மாணவர்களுக்கு ‘Assad Inspire Award’!

கற்பிட்டியில் சாதித்த மாணவர்களுக்கு ‘Assad Inspire Award’!

  • கற்பிட்டியில் சாதித்துக் காட்டிய திறமையாளர்களுக்கு தேசிய மட்ட கௌரவம்: களமிறங்கியது ‘Assad Inspire Award’!
  • க.பொ.த சாதனையாளர்களை கொண்டாடும் புத்தளம்: நாடளாவிய தொடரில் இணைந்த கற்பிட்டி வலயம்!
  • எதிர்கால தலைமுறையை செதுக்கும் மாபெரும் முயற்சி: புத்தளத்தில் மாணவர்களுக்கு மகுடம் சூட்டும் கௌரவிப்பு!

கல்வியில் பின்தங்கிய பகுதி என்ற பொதுவான பிம்பங்களை உடைத்தெறிந்து, மட்டுப்படுத்தப்பட்ட வசதிகளுக்கு மத்தியிலும் தேசிய பரீட்சைகளில் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டும் புத்தளத்து மாணவர்களின் ஆற்றல் மீண்டும் ஒருமுறை கல்பிட்டி மண்ணில் பறைசாற்றியுள்ளது.

கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிமனையின் ஆளுகைக்குட்பட்ட 44 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திகளைப் பெற்றுப் பல்கலைக்கழக வாய்ப்புகளை உறுதிசெய்த மற்றும் சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்திகளை அள்ளிக்குவித்த சாதனை மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று கல்பிட்டி சேயாப் மண்டபத்தில் வெகு விமரசையாக இடம்பெற்றது.

கற்பிட்டி மண்ணில் கல்விப் புரட்சியை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் நோக்கில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் NTM தாஹிர் அவர்களின் பிரதான நெறிப்படுத்தளில், கற்பிட்டி நகர அமைப்பாளர் எம்.எஸ்.எம். இல்மியாஸின் தலைமையில் இடம்பபெற்ற குறித்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சரும், வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக வருகை தந்து அரங்கை அலங்கரித்தார்.

இலங்கையின் கல்வி வரைபடத்தில் கடலோர கிராமப்புற மாணவர்களின் திறமைகளும் சமமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற தொலைநோக்குடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி, கலாச்சார மற்றும் நலன்புரிப் பிரிவு இந்த பாரிய கல்வி ஊக்குவிப்பு முன்னெடுப்பை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தியுள்ளது. அதன் ஒரு முக்கிய அங்கமாகவே கற்பிட்டி மண்ணின் சாதனைச் செல்வங்கள் நேற்று கௌரவத்து பாராட்டப்பட்டனர்.

“AWARD OF EXCELLENCE – ASSAD INSPIRE AWARD” எனும் தனித்துவமான அடையாளத்துடன் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இத்திட்டம், வெறும் சான்றிதழ்களைக் கையளிக்கும் சடங்காக இல்லாமல், மாணவர்களின் உள்ளார்ந்த தலைமைத்துவப் பண்புகளையும் எதிர்கால உயர்கல்வி உத்வேகத்தையும் உயிர்ப்பிக்கும் ஒரு களமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடுமையான போட்டிச் சூழலைத் தாண்டி சிறந்த சித்திகளை எட்டிய மாணவர்களின் விடாமுயற்சிக்கு பொதுவெளியில் மகுடம் சூட்டப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் கல்வி மனப்பான்மை அடுத்த நிலைக்கு உயர்த்தப்படுகிறது.

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி வலயத்தில் கல்வி கற்கும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கும் ஒரு முன்னுதாரண ஒளியாக இச்சாதனையாளர்களை நிலைநிறுத்தும் இந்நிகழ்வு, பெற்றோர்களினதும் சமூகத்தினதும் பெருமிதத்தை வெளிப்படுத்தும் வகையிலான விரிவான ஏற்பாடுகளுடன் நடைற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் பிரதேசப் பாடசாலைகளின் அதிபர்கள், புத்தளம் வலயக் கல்விப் பணிமனையின் அதிகாரிகள், சமூகப் பெரியார்கள், பெற்றோர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular