Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகல்முனையில் விஸ்வரூபமெடுக்கும் 'KPL': கடின பந்து கிரிக்கெட்டில் புதிய புரட்சி!

கல்முனையில் விஸ்வரூபமெடுக்கும் ‘KPL’: கடின பந்து கிரிக்கெட்டில் புதிய புரட்சி!

(ஏ.எஸ்.எம்.அர்ஹம்)

கல்முனை பிராந்திய கிரிக்கெட் வரலாற்றில் கடின பந்து (Leather ball) போட்டிகளின் புதிய பரிமாணமாகக் கருதப்படும் ‘கல்முனை பிரீமியர் லீக்’ (Kalmunai Premier League – KPL) கிரிக்கெட் தொடருக்கான உத்தியோகபூர்வ அறிமுக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பிராந்தியத்தின் பல்வேறு விளையாட்டுக் கழகங்களில் திறமைகளை வெளிப்படுத்தி வரும் முன்னணி வீரர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து, சமபலத்துடன் கூடிய 5 பிரதான அணிகள் இத்தொடருக்காகக் கட்டமைக்கப்பட்டுள்ளன. திறமைக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் இந்த முயற்சி, உள்ளூர் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

விழாவின் உச்சக்கட்டமாக, ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைக்கும் KPL தொடரின் அதிகாரப்பூர்வ இலச்சினை மற்றும் விறுவிறுப்பூட்டும் தீம் பாடல் (Theme Song) என்பன பார்வையாளர்களின் பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டன. அதேநேரம், களத்தில் நேருக்கு நேர் மோதவுள்ள அந்த 5 அணிகளின் பெயர்களும், அவற்றின் தனித்துவமான இலச்சினைகளும் மேடையில் உத்தியோகபூர்வமாகத் திரைநீக்கம் செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கல்முனைப் பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களுவாராச்சி கலந்து சிறப்பித்தார். மேலும் கௌரவ அதிதிகளாகப் பொறியியலாளர் ரிஸ்கான், அம்பாறை மாவட்டத் உதைப்பந்தாட்ட சங்கத் தலைவர் எம்.ஐ.எம். மனாப், கல்முனை முஹையத்தீன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரதித் தலைவர் ஐ.எல்.ஏ. அப்துல் அஸீஸ், கல்முனை லெஜண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் பிரதித் தலைவர் எம்.எச்.ஏ. அப்துல் கரீம், அதன் பொருளாளர் என்.எம்.எம். றுஸ்தி ஆகியோர் உற்பட பல்வேறு விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், முக்கிய விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பிராந்திய மட்டத்திலான திறமைகளைத் தேசிய மற்றும் சர்வதேச தளங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு பிரம்மாண்ட பாலமாக இத்தொடர் அமையும் என்பதால், கிரிக்கெட் பிரியர்கள் இப்போதே மைதானத்தில் சங்கமிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular