சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி பின் வெள்ளித்திரையில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தார் ரோபோ ஷங்கர்.
சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வந்தவர் சில தினங்களுக்கு முன் திடீரென மயங்கி விழ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து அவர் சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பார்த்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த ரோபோ ஷங்கர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.