Sponsored Advertisementspot_img
HomeLocal Newsகீரி சம்பா மோசடி: பதுளை கடைக்கு 5 லட்சம் ரூபா தண்டப்பணம்!

கீரி சம்பா மோசடி: பதுளை கடைக்கு 5 லட்சம் ரூபா தண்டப்பணம்!

அரிசிச் சந்தையில் நிலவும் கட்டுப்பாட்டு விலையை மீறி, நுகர்வோரைச் சுரண்டும் வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பதுளையில் ஒரு அதிரடித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பதுளை நகரிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு, நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகக் கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் ஐந்து லட்சம் (500,000) ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி (இலக்கம் 2414/02), உள்ளூர் கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும், மொத்த விலை 255 ரூபாவாகவும் அரசாங்கத்தால் திட்டவட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை முற்றிலும் உதாசீனப்படுத்திய குறித்த கடை, 5 கிலோகிராம் கீரி சம்பா பொதியை 1,300 ரூபாவிற்கு விற்பதற்குப் பதிலாக, 1,850 ரூபாவிற்கு நுகர்வோருக்கு விற்றுள்ளது.

இதன் மூலம் ஒரு கிலோகிராமிற்கு 110 ரூபா வீதம், 5 கிலோ பொதிக்கு 550 ரூபாவை நுகர்வோரிடமிருந்து சட்டவிரோதமாகச் சுரண்டியுள்ளது அந்த நிறுவனம். இதையடுத்து நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வர்த்தக நிறுவனம் தனது குற்றத்தை நேரடியாக ஒப்புக்கொண்டது. அதனைத் தொடர்ந்தே நீதவான் இந்த 5 லட்சம் ரூபா பாரிய அபராத உத்தரவைப் பிறப்பித்தார்.

கட்டுப்பாட்டு விலையை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தயவுதாட்சண்யமின்றி சட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரித்துள்ளது. அதேவேளை, அரிசி கொள்வனவு செய்யும் போது வர்த்தமானி விலையை உறுதிசெய்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்கள் அல்லது முறைகேடுகள் தொடர்பில் உடனடியாக ‘1977’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை அழைத்து நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular