Sponsored Advertisementspot_img
HomeLocal Newsசொத்துக் கணக்கு காட்டாத 34,000 அரச அதிகாரிகளுக்கு அதிரடித் தண்டப்பணம்!

சொத்துக் கணக்கு காட்டாத 34,000 அரச அதிகாரிகளுக்கு அதிரடித் தண்டப்பணம்!

  • சொத்துக் கணக்கு காட்டாத 34,000 அரச அதிகாரிகளுக்கு வலை: அதிரடித் தண்டப்பணம் அறவிட இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு திட்டம்!
  • அரச அதிகாரிகளுக்குப் பெரும் சிக்கல்: 34,000 பேரிடம் தண்டப்பணம் வசூலிக்கப் பாய்கிறது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு!
  • நாடு தழுவிய ரீதியில் 23 புதிய கிளைகள், 971 புதிய நியமனங்கள்: ஊழலுக்கு எதிராக களமிறங்கும் ஆணைக்குழு!

சொத்து மற்றும் பொறுப்புக்கள் விபரக் கூற்றை உரிய காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்கத் தவறிய அரச அதிகாரிகளை இலக்கு வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு தனது வலைவிரிப்பை ஆரம்பித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்புச் சட்ட விதிகளின்படி, காலக்கெடுவை மீறிய சுமார் 34,000 அரச அதிகாரிகளிடம் இருந்து தாமதக் கட்டணத்தை தண்டப்பணமாக வசூலிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களின் தலைமையில் அண்மையில் கூடிய அரச நிதி பற்றிய குழு (COPF) கூட்டத்திற்கு இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த அதிரடித் தகவல் உத்தியோகபூர்வமாக வெளிவந்தது. ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை முன்னெப்போதும் இல்லாத வகையில் துரிதப்படுத்தியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க பாராளுமன்றக் குழுவிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறு தண்டப்பணமாக வசூலிக்கப்படும் பாரிய நிதி எங்கு செல்கிறது என்ற கேள்விக்கு முக்கிய பதிலொன்றும் கிடைத்துள்ளது. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 31 ஆவது பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கெனத் தனியாக விசேட நிதியமொன்று உருவாக்கப்பட்டுள்ளதுடன், தண்டப்பணங்கள் அனைத்தும் நேரடியாக இந்த நிதியத்திலேயே வைப்பிலிடப்படவுள்ளன. அத்துடன், திரட்டப்பட்ட நிதி மற்றும் பொது நிதியம் ஆகியவற்றின் ஊடாக முன்னெடுக்கப்படும் கொடுப்பனவுப் பொறிமுறைகள் குறித்தும் நாடாளுமன்றக் குழுவில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அதிகாரிகளைத் தண்டிப்பதோடு ஆணைக்குழு தனது பணியை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை; மாறாக நாடளாவிய ரீதியில் ஊழலை முறியடிப்பதற்கான கட்டமைப்புப் பலப்படுத்தலையும் ஆரம்பித்துள்ளது. இதற்கமைய, 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் 23 பிராந்தியக் காரியாலயங்களை நிறுவுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் ஊடாக அரச கட்டடங்களை ஆராயும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இந்தத் திட்டத்திற்காக மேலும் 971 புதிய பணியாளர்களை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடையாளம் காணப்பட்ட அரச கட்டடங்களில் சிலவற்றைத் திருத்தியமைத்து அலுவலகங்களாகப் பயன்படுத்தவும், ஏனைய காரியாலயங்களை வாடகை அடிப்படையில் பெற்று பணிகளை விரைவுபடுத்தவும் ஆணைக்குழு முழுவீச்சில் தயாராகி வருகின்றது.

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular