Thursday, May 21, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal Newsபுத்தளம் மாவட்டத்தில் இலவச சட்ட உதவி முகாம்கள்!

புத்தளம் மாவட்டத்தில் இலவச சட்ட உதவி முகாம்கள்!

பொதுமக்களின் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும், சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் புத்தளம் மாவட்டத்தில் விசேட சட்ட உதவி முகாம்கள் நடைபெறவுள்ளன.

“சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் – புத்தளம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இந்நிகழ்வு, நீதி அமைச்சின் வழிகாட்டலில் பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாருக்காக இந்த முகாம்?

தினசரி வாழ்வில் நீங்கள் ஏதேனும் சட்டச் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்களா? அவற்றுக்குச் சட்டபூர்வமான தீர்வு என்னவென்று தெரியாமல் தவிக்கிறீர்களா? அத்தகையவர்களுக்காகவே இந்த முகாம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வருகை தரும் பொதுமக்கள் சிரேஷ்ட சட்டத்தரணிகளிடம் இருந்து இலவச ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடாகப் பெறவேண்டிய சட்ட உதவிகளுக்கான வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்ளும் அதேவேளை, தமது உரிமைகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

முகாம்கள் நடைபெறும் இடங்கள் மற்றும் திகதிகள்

இந்த நடமாடும் சேவை இரண்டு நாட்களாக மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது:

திகதிநேரம்இடங்கள்
மே 23காலை 10:00 – மாலை 4:001. தம்மிஸ்ஸர கல்லூரி – நாத்தாண்டிய
2. ஆனந்த கல்லூரி – சிலாபம்
மே 24காலை 10:00 – மாலை 4:001. கண்ணங்கர ஆரம்பப் பாடசாலை – ஆனமடுவ
2. அனகாரிக தர்மபால ஆரம்பப் பாடசாலை – புத்தளம்
பதிவு செய்வது எப்படி?

அதிகப்படியான நெரிசலைத் தவிர்க்கவும், சிறந்த சேவையை உறுதிப்படுத்தவும் முன்கூட்டியே பதிவு செய்துகொள்வது அவசியமாகும்.

  • இணையவழிப் பதிவு: https://ee.kobotoolbox.org/x/izkeIBkm என்ற இணைப்பின் மூலம் உங்கள் விபரங்களை வழங்கலாம்.குறிப்பு: படிவத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள “மொழியைத் தேர்ந்தெடுக்கவும்” (Select Language) என்ற தெரிவைப் பயன்படுத்தி தமிழ் மொழியில் விபரங்களை நிரப்ப முடியும்.
  • மேலதிக விசாரணைகளுக்கு: பதிவு செய்தல் அல்லது மேலதிக விபரங்களுக்கு நிஷாதி பிரமோத்யா – 0759066774 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளவும்.

இந்த மாபெரும் மனிதாபிமானப் பணியினை இலங்கை நீதி அமைச்சுடன் இணைந்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), யுனிசெப் (UNICEF), மற்றும் சர்வோதய அமைப்பு ஆகியன JURE (Support to Justice Sector Project) திட்டத்தின் கீழ் முன்னெடுக்கின்றன.

சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண இது ஒரு அரிய வாய்ப்பாகும். எனவே, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த இலவச சேவையினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular