Sponsored Advertisement
HomeERUKKALAMPIDDYபுத்தளம் லீக் போட்டியில் 2ஆம் இடம்பெற்ற எருக்கலம்பிட்டி அணி

புத்தளம் லீக் போட்டியில் 2ஆம் இடம்பெற்ற எருக்கலம்பிட்டி அணி

மர்ஹூம் கே.ஏ. பாயிஸ் அவர்களின் ஜாபகார்த்தமாக புத்தளம் நகரசபையினால் நடாத்தப்பட்ட புத்தளம் லீக் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இருதிப்போட்டி எருக்கலம்பிட்டி எப்.சி மற்றும் புத்தளம் லிவர்பூல் அணியினருக்கிடையில் நேற்று புத்தளம் மாவட்ட மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியின் முதல் பாதிவரை இரு அணிகளும் மிகச்சிறப்பாக விளையாடியதன் மூலம் எதுவித கோல்களும் இன்றி முதல் பாதி முடிவுற்றது. இரண்டாவது பாதியில் மிகவும் அபாரமாக விளையாடிய புத்தளம் லிவர்பூல் அணி 3 கோல்கள் அடித்து வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது.

புத்தளம் லிவர்பூல் அணி வீரர் நஸ்ரின் ஹெட்ரிக் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

போட்டியின் இறுதிவரை போராடிய எருக்கலம்பிட்டி எப்.சி அணி போட்டியின் இறுதி நேரத்தில் கோல் ஒன்று அடித்து எருக்கலம்பிட்டி ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சி அழித்தனர்.

எருக்கலம்பிட்டி எப்.சி அணி சார்பாக அஸ்கான் ஒரு கோலினை அடித்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.

இப்போட்டியின் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வெற்றிபெற்ற புத்தளம் லிவர்பூல் அணிக்கு 30ஆயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் வெற்றிக்கிண்ணம் வழங்கிவைத்தார்.

இப்போட்டியின் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அவர்களினால் தொடர் சுற்றின் இரண்டாம் இடத்தைப் பெற்ற எருக்கலம்பிட்டி எப்.சி அணியினருக்கு 20ஆயிரம் ரூபா பணப்பரிசு மற்றும் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நேற்றைய நிகழ்வில் புத்தளம் நகரசபை தலைவர் ஜனாப் எம்.எஸ்.எம். ரபீக், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர், இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரி லுக்மான் சஹாப்தீன், மன்னார் பிரதேச சபை தலைவர் இஸ்மாயீல் இஸ்ஸதீன் மற்றும் ஏனைய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version