ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் விசேட ஒன்றுகூடல் இன்று 05.06.2022 ஞாயிற்றுக்கிழமை புத்தளம் நீச்சல் தடாக வளாகத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் எருக்கலம்பிட்டி கிளையின் மத்திய குழு மற்றும் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் பூரண அனுசரணையில் மேட்படி ஒன்றுகூடல் இடம்பெற்றது.
புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் விருட்சத்தின் விழுதுகள் எனும் தலைப்பில் ஏட்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தேசியத் தலைவர் அல்ஹாஜ் றவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நாட்டில் ஏட்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படவேண்டிய முக்கிய நகர்வுகல் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
விசேடமாக புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் போராளிகளுக்காக ஏட்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் புத்தளம் நகரசபை தலைவர் ஜனாப் S.M ரபீக் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
நண்பகல் ஆரம்பமான இந்நிகழ்வு பகல் போஷணையை தொடர்ந்து மாலை வரை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் ஜவ்பார் மரைக்கார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜனாப் நியாஸ், ஜனாப் பைரோஸ், புத்தளம் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் புத்தளம் எருக்கலம்பிட்டி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் போராளிகள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.