சமீபத்தில் போதைப்பொருள் வழக்கில் தமிழ் நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்கள் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியது ரத்த பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் போதை பார்ட்டி நடத்தியதற்கான பல ஆதாரங்களும் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் ஜாமீன் கோரி சமீபத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் அவர்கள் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்பின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி இருக்கிறது.
ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா இருவரும் விசாரணை அதிகாரி முன் தினமும் ஆஜராக வேண்டும் என்கிற கண்டிஷனோடு தான் ஜாமீன் வழங்கப்பட்டு இருக்கிறது.