Sponsored Advertisementspot_img
HomeLocal Newsமஹர பிரதேச சபையின் NPP தவிசாளர் திடீர் இராஜினாமா!

மஹர பிரதேச சபையின் NPP தவிசாளர் திடீர் இராஜினாமா!

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தில் உள்ள மஹர பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்தும், ​தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதற்கு அத்துல கலுஆராச்சி தீர்மானித்துள்ளார்.

தமது சமூக ஊடகக் கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும், சில வருடங்களுக்கு முன்னர் கட்சியுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அவர் வலியுறுத்தினார்.

பதவிகளிலிருந்து விலகுவது அரசியல் இலக்குகளைக் கைவிடுவதோ அல்லது மக்களுக்கான அர்ப்பணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதோ அல்ல என்றும் அத்துல கலுஆராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள் ஆரம்பம்..

“அன்பான தோழர்களே, நண்பர்களே,

மஹர பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்தும், நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதற்கு நான் தீர்மானித்துள்ளேன் என்பதை மிகுந்த பொறுப்புடனும் தெளிவான புரிதலுடனும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது எவ்விதத்திலும் திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல. சில வருடங்களுக்கு முன்னர் எமது கட்சியுடன் எட்டப்பட்ட உடன்பாடு மற்றும் அன்று நான் ஏற்றுக்கொண்ட அரசியல் பொறுப்பு குறித்த தெளிவான புரிதலுடன் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

அடாவடி குடும்ப ஆட்சிகளைத் தோற்கடித்து, மக்கள் நலன் சார்ந்த ஆட்சிமுறையைக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எனது சக்தி, நேரம் மற்றும் திறமையை அதிகபட்சமாக அர்ப்பணிக்க அன்று உடன்பட்டு இந்த அரசியல் பயணத்தில் இணைந்தேன்.

2024 செப்டம்பர் 21 ஆம் திகதி அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இலக்கை வெற்றி கொண்டதன் பின்னர், நாட்டின் விரைவான வளர்ச்சிக்குத் தேவையான வலுவான அடித்தளத்தை வெற்றிகரமாகக் கட்டியெழுப்ப நம்மால் முடிந்துள்ளது. அத்துடன், எங்களைக் கடந்து முன்னோக்கிச் செல்லக்கூடிய திறமையான இளம் தலைமையையும் குழுவையும் உருவாக்கவும் நம்மால் முடிந்துள்ளது.

அவை அனைத்துடனும் நாட்டில் நிலையான அபிவிருத்தி மற்றும் தேசிய மறுமலர்ச்சியின் புதிய யுகம் ஆரம்பமாகியுள்ளது என்பது எனது நம்பிக்கையாகும்.

அன்று நாம் இணைந்து கொண்ட அரசியல் இலக்கிற்காக, இன்று மேலும் ஒரு குழுவினர் பொறுப்புகளை ஏற்று முன்னோக்கிச் செல்லக்கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, சில வருடங்களுக்கு முன்னர் எமது கட்சியுடன் எட்டப்பட்ட உடன்பாட்டிற்கு அமைவாகவும், இந்த சந்தர்ப்பத்தில் எனது தொழில்சார் நடவடிக்கைகள் மற்றும் தொழில் வாழ்க்கையை மீண்டும் சரியான முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக அதிக நேரத்தையும் கவனத்தையும் செலுத்தும் நோக்கிலும் மஹர பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்தும் தொகுதி உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளேன்.

இது எமது அரசியல் இலக்குகளைக் கைவிடுவதாகவோ அல்லது மக்களுக்கான அர்ப்பணிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதாகவோ யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன். பதவிகள் மாறினாலும் நாம் ஒன்றாகத் தொடங்கிய பயணமும், நமக்காகத் தோள்கொடுத்த மக்கள் மீதான பொறுப்பும் எவ்வகையிலும் மாறாது.

இதுவரை காலம் என்னுடன் தோளோடு தோள் நின்று செயற்பட்ட உங்கள் அனைவருக்கும், பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் ஒன்றாகக் கட்டியெழுப்பிய அரசியல் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தி, எங்களை விடவும் முன்னோக்கிச் செல்லக்கூடிய புதிய தலைமுறைக்கு வாய்ப்பளித்து, நாட்டுக்கான எமது பொறுப்பைத் தொடர்ந்து நிறைவேற்றுவோம்.

பதவிகள் தற்காலிகமானவை. நமக்காக நிலைத்து நின்ற இலக்குகளும் மக்களுக்கான அர்ப்பணிப்பும் என்றென்றும் நிலையானவை.

உங்கள் அனைவருக்கும் எனது அன்பு, கௌரவம் மற்றும் நன்றிகள்!

அத்துல கலுஆராச்சி”

RELATED ARTICLES

ALTEC SOLUTION

Official Instagram

Most Popular

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular