Friday, January 24, 2025
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeLocal News11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும்!

11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும்!

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் 11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகள் குறித்த பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று(17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த யோசனை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்னுற்பத்திக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கான விலை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த மாற்று யோசனை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 08ஆம் திகதி வரை எழுத்துமூலமான கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், மாகாண மட்டத்தில் 9 அமர்வுகள் மூலம் வாய்மொழி கருத்துகள் பெறப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முன்மொழிவு தொடர்பான எழுத்துபூர்வ யோசனைகளை info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். 

076 427 10 30 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் பொதுமக்கள் தமது யோசனைகளை முன்வைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தபால் மூலமாகவும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும். 

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி நடைமுறைப்படுத்த மின்சார சபை தற்போது முன்மொழிந்துள்ளது.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular