மூன்று மாதங்களுக்கு முன்னர் நாட்டில் சுமார் 200 பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்தது.
தற்போது அது 111 ஆகக் குறைந்துள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அது 70 ஆகக் குறையும் என்றும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஔடதங்களை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரம்புக்வெல்ல, கடந்த ஆண்டை விட பொருளாதார நிலை வலுவடைந்துள்ளதாக தெரிவித்தார்.
எனினும் நிதியை விடுவிப்பதில் பெற்றுக் கொள்வதில் சில சிக்கல்கள் உள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.