திருகோணமலை, கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பகுதியில் ரிக்டர் அளவு கோலில் 3.0 அளவில் புவியதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கிரிந்த பிரதேசத்தில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக பதிவாகியுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.