கடந்த வாரம் திரைக்கு வந்த கூலி திரைப்படம் வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட உலகளவில் ரூ. 418 கோடிக்கும் மேல் ஐந்து நாட்களில் வசூலை செய்துள்ளது.
ஒவ்வொரு நாளும் கூலி திரைப்படம் எந்தந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தமிழ்நாட்டில் இப்படம் ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல்
இதுவரை கூலி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 107 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.