ஜூட் சமந்த
14 வயது சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டில் தொழிலதிபர் ஒருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாரவில – ஹத்தினியா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மாரவில – கொடவெல சந்தியில் ஒரு வியாபாரத்தை நடத்தி வருகிறார்.
சிறுவன் அடிக்கடி அந்த வியாபார இடத்திற்குச் சென்று வருவதால், அவரது தாயார் அங்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். அப்போது, குழந்தை தனது தாயைத் தாக்கியதை அடுத்து சந்தேகத்தின்பேரில் தாய் மாரவில பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பில் சிறுவனை விசாரித்த பொலிஸார், தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சந்தேக நபர் கடந்த நவம்பர் மாதம் ஒரு நாள் தன்னை முதலில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும், அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் தன்னைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகவும் சிறுவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குழந்தை, மருத்துவ பரிசோதனைக்காக மாரவில அடிப்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.


