Sunday, April 12, 2026
Sponsored advertisementspot_img
Sponsored Advertisementspot_img
HomeMuslim Worldஅமெரிக்க - ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் திருப்பம்!

அமெரிக்க – ஈரான் போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் திருப்பம்!

ஈரான்-அமெரிக்கா இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமைதி பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானில் இரு நாட்டு அதிகாரிகளும் வந்திருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தானை முன்னிறுத்தி முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி ஸ்மூத்தாக போகிறது எனில், ஹார்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் போக்குவரத்து சீராகும். எனவே பேச்சுவார்த்தை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மாலை 6.45 மணி நிலவரப்படி, அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தை நிறைவடைந்திருக்கிறது. இதில், பாகிஸ்தானிடம் ஈரான் வைத்த டிமாண்டுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.

அந்த வகையில் கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பெரிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரான் நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் லெபனானில் போர் நிறுத்தம், ஈரானின் சொத்துக்களை விடுவித்தல் இது இரண்டும் நடைமுறைப்படுத்தப்படும்பட்சத்தில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஈரான் கூறியிருந்தது. இதனை பாகிஸ்தான் பிரதிநிதிகள் அமெரிக்காவிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

போரில் ஈரானை பணியவைக்க முயன்ற அமெரிக்கா, எப்படியாவது ஹார்முஸ் ஜலசந்தியை திறந்தால் போதும் என்ற அளவுக்கு தற்போது பேச்சுவார்தைக்கு இறங்கி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை அமெரிக்காவின் நட்பு நாடான பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்து வருகிறது.

இதில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் உள்பட் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக கத்தார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் பெரிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, பேச்சுவார்த்தையில் அவர்கள் கொண்டுள்ள “தீவிரத்தன்மையை” காட்டுவதாக ஈரான் தரப்பு கருதுகிறது. இந்த சொத்துக்களை அமெரிக்கா சும்மா ஒன்றும் விடுவிக்கவில்லை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதோடு நேரடித் தொடர்புடையது என்று ஈரான் அதிகாரி கூறியுள்ளார்.

இது இஸ்லாமாபாத்தில் தொடரும் பேச்சுவார்த்தைகளில் மிக முக்கியமான விவாதப் பொருளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது குறித்து அமெரிக்க தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பொதுவெளியில் எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஈரான் தரப்பு மட்டுமே கருத்துக்களை தெரிவித்துள்ளது. அமெரிக்கா தரப்பு தெரிவித்தால் தான் உண்மை நிலவரம் தெரியும்.

RELATED ARTICLES

𝐀𝐋𝐓𝐄𝐂 𝐈𝐓 𝐒𝐎𝐋𝐔𝐓𝐈𝐎𝐍𝐒

Official Instagram

Most Popular

- SPONSORED ADD -

Official Instagram

Most Popular